உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Heat wave increased in tamilnadu districts

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "13-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகலாம்.

14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். 

Heat wave increased

அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்ப நிலையாக 21 டிகிரி செல்சியசும் பதிவாகும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டமானது இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.