வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது யார்.?
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்தநிலையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர், 1,35,571 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் திலகபாமாவை தோற்கடித்துள்ளார்.
இதனையடுத்து இரண்டாவதாக, திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் தணிகைவேலை தோற்கடித்தார். இதனையடுத்து மூன்றாவதாக பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.கிருஷ்ணசாமி 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் பாமகவின் ராஜமன்னாரை தோற்கடித்தார்.
இதனையடுத்து நான்காவதாக எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் கே. பழனிசாமி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து ஐந்தாவதாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேரு 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆறாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 70,384 வாக்குகள் வித்தியாசத்திலும், இதனையடுத்து ஏழாவதாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எட்டாவதாக திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
9 வது இடத்தில் திருக்கோயிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பொன்முடி 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.10 ஆவது இடத்தில் மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் எஸ். கதிரவன் 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.