மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 பணியிடங்களுக்கு 1000 பேர் போட்டி: விழி பிதுங்கிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்..!
ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள ஐந்து காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை, ஈரோடு இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மூன்று, இரவு காவலர் பணியிடம் ஒன்று, ஓட்டுநர் பணியிடம் ஒன்று என மொத்தம் ஐந்து பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு, நேற்று ஈரோடு திண்டல் முருகன் கோயிலில் நடைபெற்றது.
இந்த நேர்முகத் தேர்வில் 5 காலி பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வி முடித்தவர்கள் மட்டுமின்றி, பொறியாளர்கள், பட்டதாரி இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்களை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர்கள் ரமேஷ், மேகலா மற்றும் அதிகாரிகள் நேர்காணல் செய்தனர்.