மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொடியில் நடந்த கோர விபத்து.. கார் இடித்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் மீது லாரி ஏறி இறங்கியதால் உடல் நசுங்கி பலி..!
துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் சிவகாமி. இவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை சிவகாமி வழக்கம் போல் திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே ECR பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வேகமாக வந்த கார் சிவகாமி மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி சிவகாமி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த கனரக லாரி சிவகாமியின் மேல் ஏறி இறங்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலே சிவகாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளார்.
இதனைதொடர்ந்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த திருவான்மியூர் காவல் துறையினர் சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து விசாரணையில் சிவகாமி மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் மவுலிவாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியரான அஷ்வந்த் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அஸ்வினின் காரை காவல் துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துய்மைப் பணியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.