#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சச்சோ.. மார்ச் 21ம் தேதிக்கு பின் வெப்பநிலை சென்னையில் உயரும் - வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்.!
இந்தியாவில் வெப்பநிலை என்பது வடமேற்கு மற்றும் மத்திய மாநிலத்தில் வழக்கத்தை விட உயர்ந்து வருகிறது. இந்த வெப்பநிலை உயர்வு என்பது சென்னையிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
மார்ச் மாதத்தின் இறுதியில் கோடை தொடங்கும்போது பகல் நேர வெப்பமும் அதிகரிக்கும். இந்நிலையில், நடப்பு மாதத்தின் இறுதியில் சென்னையில் வெப்பநிலை உயரும். தெந்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிகபட்சமாக 33 - 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 - 23 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். இந்தியாவில் உள்ள வடமேற்கு & மத்திய மாநிலத்தில் 6 டிகிரி வரை வெப்பம் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு & கேரளாவை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டை போல வெப்பநிலை குறைவாக இருக்கிறது. ஆனால், வடகிழக்கு நோக்கி நகரும் காற்றின் சுழற்சியால், தமிழகத்தின் ஈரப்பதம் இழுக்கப்பட்டு மார்ச் 21ம் தேதிக்கு பின்னர் வெப்பம் உயரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.