அடக்கொடுமையே!! சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கொத்தனார் கைது..!



Humility!! Sexual harassment of a girl.. Mason arrested..!

தூத்துக்குடி பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி , மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார்.

அப்போது அவரது மகள் அந்தப் பகுதியில் உள்ள கடைவீதிக்கு தனது தம்பியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் குடிபோதையில் போதை தலைக்கேறியவாறு வந்த அதே பகுதியில் கொத்தனார் வேலை செய்யும் ஜெகதீஷ் என்ற இளைஞர் அந்த சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

Sexual Harrasment

இதனால் அதிர்ந்து போன சிறுமியும் அவரது தம்பியும் அலறி கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டுத்தோடு மட்டுமல்லாமல் தப்பிச் செல்ல முயன்ற ஜெகதீஷை பிடித்து இரணியல் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று கொத்தனார் ஜெகதீஷ் மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து ஜெகதீஷை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.