மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! விவசாய நிலத்திற்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்.. கதறும் உறவினர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் சின்ன ஏழாசேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணன் - விஜயா தம்பதியினர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விஜயா தனது விவசாய நிலத்திற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷக் கடிக்காக விஜயா தொடர்ந்து நாட்டு வைத்தியம் எடுத்து வந்துள்ளார்.
இருப்பினும் விஜயாவின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உடல் சோர்ந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் விஜயா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் விஷ பூச்சி கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.