#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதுபோதையில் மனைவியை கட்டிப்பிடித்து நின்ற கணவர்... திடீரென நடந்த பரிதாப சம்பவம்!!
உத்திரபிரதேச மாநிலத்தில் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரிடம் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்ய முயன்ற மனைவியை காப்பற்ற சென்று இருவரும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்த் - குஷ்பு தம்பதியினர். குஷ்புவின் கணவர் தினமும் குடித்து விட்டு தகராறு செய்த வந்த காரணத்தால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள எண்ணி அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்று நின்றுள்ளார் குஷ்பு.
இதனை அறிந்த கணவர் குடிபோதையிலேயே சென்று மனைவி கட்டிப்பிடித்து சமாதானம் செய்துள்ளார். அந்த நேரம் எதிர்பாராத விதமாக ரயில் வரவே இருவரும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.