#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி மற்றும் 2 குழந்தைகள் விஷம் வைத்து கொலை.. கணவன் தற்கொலை முயற்சி.!
கிருஷ்ணகிரி அருகே மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு கணவர் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கடலரசு. இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் மகளும் இருந்துள்ளனர். இதில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் திருமண நாளான நேற்று மனைவி மற்றும் தனது பிள்ளைகளை பெரிய மலை தீர்த்தம் கோயிலுக்கு கடலரசு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென கடலரசு விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவியின் வாயிலும் விஷத்தை ஊற்றியுள்ளார். இதனால், அங்கிருந்து உடனடியாக தப்பித்து ஓடியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கடல் அரசு தனது 2 குழந்தைகளின் வாயிலும் விஷத்தை ஊற்றி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதில், தப்பிச்சென்ற ஜனனி அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்கையில், 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கடல் அரசு மற்றும் ஜனனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.