மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ட்விஸ்ட் அடித்த ஸ்ரீமதியின் குடும்பத்தினர்: உடலை புதைக்க முடிவு செய்ய இதுதான் காரணமாம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், கடந்த கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் மர்மம் இருப்பதாக மாணவியின் தந்தை மனுதாக்கல் செய்திருந்த நிலையில் மாணவியின் உடலை 3 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் முன்னிலையில் மீண்டும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என மாணவியின் தந்தை முறையிட்டார்.
ஆனால் அதற்கு நீதிமன்றம் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் மறுபிரேத பரிசோதனைக்கும் வரவில்லை உடலையும் பெற்று கொள்ளாமல் இருந்து வருந்தனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்தார்.
அப்போது மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கைகளை 3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக் குழு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும என்றும் உத்தரவிட்டார்.
மேலும், மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு கண்ணியமாக உடலை அடக்கம் செய்யும்படி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, உடலை பெற்றுக் கொள்ள மாணவியின் பெற்றோர் ஒப்புக் கொண்டனர். அதன் படி இன்று காலை 6.30 மணியளவில் மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட்து. இதனை தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை மாணவியின் உடல் மருத்துவமனையில் இருந்து பெரிய நெசலூர் கிராமத்திற்கு கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. ஆனால் இதில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. 8.30 மணி அளவில் மாணவியின் உடல் அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை முதலில் தகனம் செய்யவே முடிவு செய்து இருந்தனர். அவரின் குல வழக்கப்படி உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று காலை அந்த முடிவு கைவிடப்பட்டு உடலை புதைக்க ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்துள்ளனர். இது குறித்து மாணவியின் தரப்பில், மரணத்தில் சந்தேகம் உள்ளதாலும் பிரேத பரிசோதனையில் எங்களுக்கு திருப்தி இல்லாததாலும் இந்த முடிவுக்கு வந்தாக கூறப்படுகிறது.
ஒருவேளை ஜிப்மர் மருத்துவக்குழு அளிக்கும் அறிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் உடலை மீண்டும் பரிசோதனை செய்ய கோரிக்கை வைப்போம். இதற்காக உடலை புதைக்க முடிவு செய்தோம். தகனம் செய்தால் அதன்பின் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்பதால் தங்களது முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.