பவானியின் பவ்விய காதலில் சிக்கி, ஏமாற்றத்தால் இளைஞர் விபரீதம்..! வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்து சோகம்.!



in Chennai Korukupet Youth Dies by Suicide 

வாட்சப்பில் எனது மரணத்திற்கு இந்த பெண்தான் காரணம் என, காதலியின் செல்போன் நம்பரை ஸ்டேட்டஸ் வைத்து உயிரிழந்த நபரின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

விவாகரத்து பெண்ணுடன் காதல்

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் சவுண்ட் சர்விஸ் கடை நடத்தி வருபவர் பிரேம் குமார். இதே பகுதியில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பிரேம் குமார் - பவானி இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக தெரியவருகிறது.

கம்பி நீட்டிய பவானி

இதனால் நான் உன்னையே திருமணம் செய்வேன் என பவானி ஆசை வார்த்தை கூறி இருக்கிறார். இதனிடையே, பவானிக்கு வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக பிரேம் குமாரை விட்டு விலகியுள்ளார். இது பிரேம் குமாரிடையே மனவேதனையை தந்துள்ளது. 

இதையும் படிங்க: சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்; பள்ளி மாணவர் உட்பட 2 பேர் கைது.!

chennai

இளைஞர் தற்கொலை

காதலுக்காக எடுக்கப்பட்ட இறுதிக்கட்ட முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரேம் குமார் பெண்ணின் செல்போன் நம்பரை தனது வாட்சப்பில் "எனது மரணத்திற்கு காரணம் இவர்தான்" என பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!