சென்னை: ஓசி சோறு கொடுக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு; மூவர் கை எழும்பு முறிவு.!



in CHennai Poonamalle hotel owner Attacked by 3 Man Gang 

 

சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியில், சுகன்யா தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சம்பவத்தன்று உணவு சாப்பிட வந்த 3 பேர் கும்பல், தனக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளது. 

பின் சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கடையின் உரிமையாளரை பட்டா கத்தி கொண்டு எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றது. அங்கிருந்தவர்கள் உடனடியாக உரிமையாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை; கயவனை தூக்கிய சென்னை காவல்துறை.!

தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி

3 பேர் கும்பல் கைது:
மேலும், இதுகுறித்து நரசரத்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த முத்து (30), அம்பேத்கர் நகர் மணிகண்டன் (25), செம்பரம்பாக்கம் சசிகுமார் (23) ஆகியோரை கைது செய்தனர். 

இவர்கள் ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்திய நிலையில், அதே நாள் இரவில் அம்பத்தூர், கொரட்டூர் பகுதிக்கும் சென்று அரிவாளால் வெட்டி பணம் பறித்துள்ளனர். இந்த கும்பலால் ஒரே நாளில் 3 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

விசாரணையின்போது, இவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்று தங்களின் கை எலும்புகளை முறித்துக்கொண்டனர்.

சம்பவத்துக்கு முன், சம்பவத்துக்கு பின்

இதையும் படிங்க: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!