பல பெண்களிடம் மோசடி திருமணம்; கேடி இளைஞன் கைது.. இறுதி நேரத்தில் பெண்ணை காப்பாற்ற முயன்றும் தோல்வி.! 



  in Chennai Vannarapettai Church 

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை தேவாலயத்தில், டிச.2 அன்று திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணமகனாக இருந்த விஜின் மீது குற்றச்சாட்டு வைத்த பெண்மணி, திருமண நாளில் பிரச்சனை செய்திருந்தார். 

இதனால் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த மணப்பெண் வீட்டார், பிரச்சனை செய்த பெண்மணி விஜினின் மீது அவதூறு பரப்பி, பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறினர். காவல்துறையினர் வந்து பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர்.

காவல் நிலையத்தில் புகார்

தன் மீது தவறில்லை என பெண் ஆட்டோவில் இருந்து அலறியபடி அழைத்துச் செல்லப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனிடையே, விஜினின் மீது காவல் நிலையத்தில் மணப்பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.110 நோட்டு கொடுத்து சில்லறை வாங்கிச் சென்ற மர்ம ஆசாமி; பெட்டிக்கடைக்காரர்களே உஷார்.!

cheating

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜின் பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றியவர், மேட்ரிமோனி வலைத்தளங்கள் வாயிலாகவும் பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கி தலைமறைவாகுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

மோசடி திருமணம்

கடந்த 2019ம் ஆண்டு காரைக்காலைச் சேர்ந்த பெண், பின் தென்காசியைச் சேர்ந்த பெண், கடலூரைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி இருக்கிறார். தாய், தந்தை உதவியுடன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இறுதியாக மேட்ரிமோனி மூலமாக வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்மணி வரன் தேடியபோது, கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜின் தன்னையும் பட்டதாரி என அறிமுகம் செய்து திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

தற்போது விஜினை கைது செய்த காவல்துறையினர், மகனின் கேடித்தனத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்; 13 பேருக்கு சிறுநீரக பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை.!