"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#Breaking: தாயின் கண்முன் ஆற்று நீரில் மூழ்கி மகள் துள்ளத்துடிக்க பலி.. துணிதுவைக்கச் சென்றபோது நடந்த துயரம்.!
துணை துவைக்கச் சென்றபோது, தாயின் கணமுன் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்கியதால் நடந்த சோகம் பதறவைத்துள்ளது.
தாய்-மகள்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர், பண்ரூட்டி, ஏரிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் மனைவி சாய்ஸ்ரீ. தம்பதிகளுக்கு 15 வயதுடைய சைனஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இன்று தாய்-மகள் இருவரும் கெடிலம் ஆற்றுக்கு துணிகள் துவைக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: #JustIN: கணவன் - மனைவி தகராறில் கொடூரம்.. குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை.. உறவினர்கள் கண்ணீர்.!
ஆற்று நீரில் குரல்
தாய் துணிகளை துவைத்து காய வைத்துக்கொண்டு இருந்தபோது, மகள் ஆற்று நீரில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அப்போது, பெரிய அளவிலான பள்ளம் இருப்பது தெரியாமல், நீரின் போக்கில் சிறுமி பள்ளத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
தாயின் கண்முன் சோகம்
நீச்சல் தெரியாத காரணத்தால் சிறுமி அலறிய நிலையில், மகளை காப்பாற்றக்கூறி தாயும் அபயக்குரல் எழுப்பி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது.
திருட்டு பள்ளங்கள்
கெடிலம் ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் சென்ற நிலையில், தற்போது நீரின் திறப்பு குறைந்து நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பலரும் ஆற்றுக்குள் இறங்கி குளியல், சுற்றல் என இருந்து வருகின்றனர். ஆனால், ஆறுகளில் நீர் செல்லாதபோது அள்ளப்பட்ட திருட்டு மணல் பள்ளங்கள் அதிகம் இருக்கின்றன.
இந்த பள்ளங்கள் நீரின் வேகத்தில் ஆங்காங்கே தங்களின் போக்கை மாற்றியும் இருக்கும். ஆற்று நீரின் வேகம் அதிகரிக்கும்போது மணலும் அடித்துச் செல்லப்பட்டு திடீர் பள்ளங்களும் உண்டாகி இருக்கும் என்பதால், ஆறு என்ன செய்யும் என இருக்கும் நபர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
இதனால் தாயின் கண்முன் சிறுமி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விசாரணைக்கு தொடர்புகொண்ட பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஜேசிபி உரிமையாளர் கைது..!