"ராஜா வெளில வந்திடு" - அன்பாக அழைத்தும் வராத கேடி., கதவை உடைத்து உள்ளே சென்ற போலிஸ்.!



in Kanyakumari Man Arrested in HOme after Breaking Door by Cops 

 

மயிலே மயிலே இறகு கொடு என்றால் கொடுக்காது என்பதைப்போல, ராஜா பிடிவாரண்ட் இருக்கு., நீயே வெளியே வா என அழைத்தும் வராததால், வீட்டின் கதவை உடைத்து குற்றவாளியை கைது செய்யும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டமாவு கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவர் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். இவரின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இதையும் படிங்க: பேருந்துக்கு அடியில் கண்ட காட்சி.. பரபரவென ஓடிய பெண்.. கொத்தாக பிடித்த பயணிகள்.!

குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டு தப்பிக்க நினைத்த சுரேஷ் குமாருக்கு எதிராக, காவல்துறையினர் நீதிமன்றம் உதவியுடன் பிடிவாரண்ட் பிரித்து இருக்கின்றனர். 

பிடிவாரண்ட்

கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

பிடிவாரண்டுடன் காவல்துறையினர் சுரேஷ் குமாரை கைது செய்ய சென்றபோது, சுரேஷ் தனது வீட்டினை தாழிட்டு அதிகாரிகளை அலைக்கழித்தார். 

கதவை உடைத்து கைது

சுரேஷ் குமாரை பலமுறை அமைதியான முறையில் அழைத்தும் பலனில்லை. இதனால் கதவை உடைக்கப்போவதாக எச்சரித்தனர். அப்போதும் சுரேஷ் வெளியே வரவில்லை.

இதனால் காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து சுரேஷ் குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதையும் படிங்க: "ஒரு நொடி பொறுமையா வந்திருக்கலாமே?".. கார் - இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி., முந்திச்சென்று சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!