தாழ்வாக தொங்கிய மின்கம்பி உரசி விவசாயி பலி.. தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய உச்சத்தால் பறிபோன உயிர்.!



in Thoothukudi Farmer Dies Electrocution 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவஞானபுரம், வாகக்குளம் கிராமத்தில் விவசாய நிலங்கள் இருக்கின்றன. இங்குள்ள விவசாய பணிகள் நடைபெற்று வரும் இடத்தில், மிகம்பம் ஒன்று தாழ்வாக அறுந்து தொங்கி இருந்துள்ளது.

இந்த விஷயம் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் விவசாயி முருகன் (வயது 40), தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

சம்பவ இடத்திலேயே மரணம்

அப்போது, எதிர்பாராத விதமாக தாழ்வாக இருந்த மின்கம்பி கழுத்தில் உரசவே, மின்சாரம் தாக்கி அவர் நிகழ்விடத்திலேயே சடலமாக கிடந்தார். 

இதையும் படிங்க: என் புள்ள போயிருச்சே - மூச்சுத்திணறி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை.. மருத்துவமனையில் சோகம்.. பெற்றோர் குமுறல்.!

அப்பகுதி மக்கள் வயல் பணிகளுக்கு சென்றபோது இந்த சோகம் நடந்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த கயத்தாறு காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை வேண்டாம் என எழுதிக்கொடுத்த தமிழ்நாடு அரசு; மத்திய அமைச்சர் பதில்.!