திருச்செந்தூர் கோவிலில் பகீர் சம்பவம்; இருதரப்பு மோதலால் சர்ச்சை..! எஸ்ஐ மீது குற்றச்சாட்டு.!



  in Thoothukudi Tiruchendur Murugan Temple SI Selvam Abused Devotees 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில், பிரசித்தி பெற்ற அறுபடை முருகன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் முழுவதும் திரளான முருக பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கிச் செல்வார்கள். 

பக்தர்கள் வருகை

தற்போது கார்த்திகை-தை மாதத்தை முன்னிட்டு, பக்தர்கள் பலரும் மாலை அணிவித்து, விரதம் இருந்து திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் தினமும் பக்தர்களின் கூட்டமானது அலைமோதி வருகிறது. 

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் அதிர்ச்சி... பெண்கள் டாய்லெட்டில் ரகசிய கேமரா.!! பயிற்சி மருத்துவர் கைது.!!

இருதரப்பு மோதல்

பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்து, ரூபாய் 100 தரிசன டிக்கெட்டில் சென்ற பக்தர்களில், இருதரப்புக்கு இடையே வாக்குவாதமானது எழுந்துள்ளது. 

விசாரணைக்கு அழைத்துச் சென்ற உதவி ஆய்வாளர்

அப்போது, சம்பவ இடத்திலிருந்து காவல் உதவி ஆய்வாளர் சமாதானம் செய்யச் சென்ற போது, நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. இதனால் அங்கு பிரச்சனை செய்யும் தோணியில் இருந்த மூன்று பேரை வேட்டியை பிடித்தவாறு காவல் உதவி ஆய்வாளர் தன்னுடன் இழுத்துச் சென்றார். 

இந்த விஷயம் தொடர்பான காணொளியை எடுத்து வைத்த பக்தர் தரப்பு, காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வம் பக்தர்களை இழுத்துச் சென்று துன்புறுத்தி, மக்கள் மத்தியில் அவமானப்படுத்தி பொய் வழக்கு போட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: 'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!