பொங்கலுக்கு புதுத்துணி எங்கே? விரக்தியில் புதுமணப்பெண் தற்கொலை.. துக்கத்தில் கணவரும் விபரீதம்.!



  in Tirupattur Newly Weds Girl Dies by Suicide 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (வயது 28). இவரின் மனைவி பவித்ரா (வயது 23). தம்பதிகள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

இதனிடையே, சமீபத்தில் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவில் பவித்ரா, கணவரிடம் பொங்கல் துணி எடுத்து வரலாம் என அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சந்தோஷ் தட்டிக்கழிக்கவே, மனமுடைந்த பிரியா வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

suicide

தூக்கிட்டு தற்கொலை

இதனிடையே, இன்று காலை வீட்டிற்கு வந்த சந்தோஷ், நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாத காரணத்தால் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது, மனைவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனால் மனவேதனையடைந்த கணவர், வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு மயங்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!

இந்த தகவலை அறிந்த உறவினர்கள், சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பொங்கலுக்கு துணி எடுத்து தரவில்லை என பவித்ரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஷூ லேஷில் கழுத்தை இறுக்கி மாணவி தற்கொலை; கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!