ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கடையில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆபாச பேச்சு.. உரிமையாளர் அதிரடி கைது.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பேட்ரிக் (வயது 39). இவர் மருத்துவ சாதன கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரின் நிறுவனத்தில் பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே, தன்னிடம் பணியாற்றும் பெண்களிடம் பேட்ரிக் எப்போதும் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மாரடைப்பால் உயிரிழந்த தாய்; துக்கத்திலும் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்.!
கடையின் உரிமையாளர் கைது
மேலும், அவரின் பேச்சு பிடிக்காமல் வேலைக்கு வர மறுப்பு தெரிவிக்கும், வேலையில் இருந்து விலகி செல்லும் பெண்களுக்கு, பேட்ரிக் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
வேலைக்கு வந்த பெண்களின் சான்றிதழையும் கொடுக்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்னர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் பேட்ரிக்கை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க: 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!