இன்ஸ்டா காதலனை வீட்டிற்கு அழைத்ததால், சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்.! 



in Tiruvannamalai 15 Aged Minor girl Rape Attempt 

 

திருமணம் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி, இன்ஸ்டா காதலியிடம் அத்துமீற முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவில் இருக்கும் கிராமத்தில், 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் விமல் ராஜ்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை போறிங்களா? தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் விபரங்கள் இதோ.!

இன்ஸ்டாகிராம் பழக்கம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இன்ஸ்டாகிராம் செயலியில் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தங்களின் ஸ்மார்ட்போன் நம்பரை பகிர்ந்துகொண்டு பழகி வந்துள்ளனர். 

திருவண்ணாமலை

இதனிடையே, நேற்று முன்தினத்தில் மாணவியை நேரில் சந்திக்க விமல் தேனியில் இருந்து வெம்பாக்கம் வந்துள்ளார். அப்போது, வீட்டில் மாணவி தனியே இருந்துள்ளார். 

கூச்சலிட்ட சிறுமி

இதனை தனக்கு சாதகமாக்கிய ராஜ், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் விரைவில் திருமணம் செய்யலாம் என பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் பதறிப்போன சிறுமி கூச்சலிட்டு இருக்கிறார். 

சத்தம் கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தப்பியோட முயன்ற விமல்ராஜை பிடித்தனர். பின் அவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படவே, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விமல்ராஜ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

இதையும் படிங்க: குஷியோ குஷி.. 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை; திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!