குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தாயின் கண்முன் 15 வயது சிறுமி பலி; குளத்தில் மூழ்கி மரணம்.!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் வரஞானவேல். இவரின் மனைவி பிரேமா. தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இருவருக்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், இரண்டாவது மகள் சுமத்ரா (வயது 10). சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
குளத்தில் மூழ்கி சோகம்
இதனிடைய, நேற்று பிரேமா தனது மகள் சுமத்ரா, உறவினரமைகளான சிறுமி நிஷா ஆகியோருடன் குளக்கரைக்கு சென்று குளித்து, துணிகளை துவைத்துக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: "அப்பா திரும்பி வாப்பா" - தந்தை நீச்சல் அடிப்பதாக நினைத்த மகள்கள் கண்முன் நடந்த சோகம்.!
அப்போது, சுமத்ரா எதிர்பாராத விதமாக நீரின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கிக்கொண்ட நிலையில், சுமத்ரா தாயின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையின்போது சோகம்; வீட்டை சுத்தம் செய்த பெண் பலி.!