#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வா என்று அழைத்த விதி: தேடிவந்து சிக்கிய வாலிபருக்கு நேர்ந்த கதியால் சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரிபாபு (43). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சூளைமேட்டிலுள்ள வீரபாண்டியன் நகர் 1 வது தெருவில் நேற்று பழைய வீடு ஒன்றை ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு இடித்து கொண்டிருந்தனர். அப்போது வீடு இடிப்பதை வேடிக்கைப் பார்பதற்காக இடிக்கும் வீட்டின் அருகில் இருந்த வீட்டுக்கு, ஹரிபாபு வந்துள்ளார்.
அங்கு வந்த ஹரிபாபு பக்கத்து வீட்டை இடிப்பதனால், வீட்டுக்குள் தூசும், சத்தமும் அதிகமாக வருவதாக அந்த வீட்டில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், அவர் பேசிக்கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி சுவர் திடீரென அதிர்வில் உடைந்து ஹரிபாபு மேல் விழுந்துள்ளது.
இதன் காரணமாக இடிந்து விழுந்த விழுந்த சுவரின் இடிபாடுக்குள் ஹரி பாபு சிக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஹரிபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சூளைமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி ஆப்பரேட்டரான திருவேற்காட்டை சேர்ந்த மகிழன் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு இடிப்பதை வேடிக்கை பார்க்க வந்தவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.