மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு என போலியாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் வருமான வரி ஆணையர்..!
வருமான வரித்துறையில் ஆட்சேர்ப்பு பற்றிய போலியான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூடுதல் வருமான வரி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூடுதல் வருமான வரி ஆணையர் வி.வித்யாதர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது, வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரி வேலையில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்ற கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளத்திவ் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. வருமான வரி அதிகாரி வேலை வாய்ப்பு முழுவதும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. அந்தப் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு கிடையாது.
மேலும், வருமான வரித்துறையில் இருக்கும் பல்வேறு கெசடட் இல்லாத வேலைக்கு ஆட்சேர்ப்பு, பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி.) நடந்து வருகிறது. வருமான வரித்துறையில் இருக்கும் குரூப்-ஏ பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான செயல்முறை, யூ.பி.எஸ்.சி. மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே, எஸ்.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. போன்றவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்களை பொதுமக்கள் பார்க்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து சந்தேகம் இருந்தால், அந்த அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம். வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் மற்றும் நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையில் யாரும் விழ வேண்டாம். மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக வரும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் போலியான செய்திகளுக்கு பொதுமக்கள் வழியாக வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.