#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொன்னியின் செல்வம் பார்க்க வந்த ரசிகர்களை பதறவைத்த திரையரங்கம்!! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!!
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், , ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் நேற்று பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் சேலத்திலும் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மூன்று திரைகளில் வெளியானது.
இந்நிலையில் அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் கேண்டீனில் குளிர்பானங்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை வாங்கிய போது அந்த டப்பாக்களில் பயன்படுத்தும் தேதி குறிப்பிடப்படாமல் இருந்துள்ளது. மேலும் குளிர்சாதன பெட்டியில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் அங்கு விரைந்த
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் இருந்த 150க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள், ஸ்நாக்ஸ்கள், 50 லிட்டருக்கும் அதிகமாக பால் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதனை திரையரங்கு முன்புள்ள கால்வாயில் கொட்டி அழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.