வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
அடுத்ததாக சிக்கிய 6வது அதிமுக முன்னாள் அமைச்சர்.! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.!!
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீடு உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார். இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கேபி அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.