கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நபர்.! இது தான் காரணமாம்.!



kameela nasse resigns from mnm

சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த போது கமலின் நண்பர் நாசரின் மனைவி கமீலா நாசருக்கு மாநிலச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டார் கமீலா நாசர். மேலும், அந்த தொகுதியில்  கணிசமான வாக்குகளை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தனது கட்சி பதவியை ராஜினாமா செய்திருந்தார் கமீலா நாசர். தேர்தலையொட்டி நடைபெற்ற கட்சி கூட்டங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதிலும் பங்கேற்காமல் கமீலா நாசர் ஒதுங்கியே இருந்தார். இதனையடுத்து அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

kamal

இதுதொடர்பாக  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலக பொதுச்செயலாளரான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த கமீலா நாசர் நேற்று முதல் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமீலா நாசர் சென்னை விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார் . ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக கடந்த வாரமே அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.