திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரூ.6 இலட்சம் நகைக்காக மூதாட்டி இரும்பு ராடால் அடித்தே கொலை; வாடகைக்கு குடியிருந்த வடமாநில இளைஞரின் அதிர்ச்சி செயல்?.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், கட்டவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுகுணா (வயது 65). மூதாட்டி சுகுணா தனது வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். இவரின் வீட்டு மேல்தளத்தில் 10 க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் குடியிருந்து வருகிறார்கள். மூதாட்டி தனியாக வசித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இரும்பு ராடு கொண்டு அடித்துக்கொலை
இதனிடையே சம்பவத்தன்று மூதாட்டி இரும்பு ராடு கொண்டு கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த வாலாஜா காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை; பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்.!!
2 இளைஞர்கள் தலைமறைவு
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், மூதாட்டி அணிந்திருந்த ரூ.6 இலட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமானது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், மேல்தளத்தில் குடியிருந்த 10 இளைஞர்களில் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் இருவரும் மூதாட்டியை நகைக்காக கொலை செய்து தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அவர்களுடன் தங்கியிருந்த 8 பேரிடம் விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்; நெல்லையில் பகீர் சம்பவம்.!