சரக்கு போதையில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. இறுதியில் துள்ளத்துடிக்க நேர்ந்த சோகம்., துடிதுடிக்க பறிபோன பரிதாபம்.!



krishnagiri-anekal-affair-woman-killed-by-affair-man

கள்ளகாதலியுடன் மதுபோதையில் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்ட கள்ளக்காதலன், சம்பவத்தன்று நடத்த தகராறில் கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் வசித்து வருபவர் மாதம்மா. இவரின் கணவர் கடந்த சில ஆண்டிற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, பிழைப்புக்காக தேன்கனிக்கோட்டையில் இருந்து பெங்களூர் சென்ற மாதம்மா, அனேகல் சூரியா நகரில் தங்கியிருந்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். 

மாதம்மாவுடன் முனி என்பவர் வேலைபார்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து மதுபானம் அருந்தி வந்துள்ளனர். 

Krishnagiri

தினமும் மதுபானம் அருந்தும் கள்ளக்காதல் ஜோடி, போதையில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இருவரும் மதுபோதையில் இருந்த நேரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் ஆத்திரமடைந்த முனி கள்ளக்காதலி மாதம்மாவை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முனி தப்பியோடவே, அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக சூர்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் மாதம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான முனிக்கு வலைவீசப்பட்டுள்ளது.