மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓசூரில் நெகிழ்ச்சி சம்பவம்.. இறந்தும் மறுபிறவி கொடுத்த பெண்.. துக்கம் கலந்த மகிழ்ச்சியில் உறவினர்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சின்ன ஏலகிரி பகுதியில் வசித்து வருபவர்கள் அமரேசன் - ஹேமாவதி தம்பதியினர். அமரேசன் மனவளக்கலை மன்ற துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த சில காலங்களாகவே ஹேமாவதி மிகுந்த தலைவலியால் அவ்வப்போது அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 22 ஆம் தேதி மிகுந்த தலைவலி ஏற்பட்டு ஓசூர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தலையில் மூளை புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனால் ஹேமாவதி மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கடந்த 26 ஆம் தேதி ஹேமாவதிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரது கணவர் அமரேசன் ஹேமாவதி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
இதனையடுத்து பெங்களூர் மருத்துவமனையில் ஹேமாவதியின் இரு கண்கள் மற்றும் சிறுநீரகம் போன்றவை தானமாக வழங்கப்பட்டது. பின்னர் ஹேமாவதியின் சிறுநீரகம் உடனடியாக சிறுநீரகம் செயலிழக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு பொருத்தப்பட்டது. இதனையடுத்து ஹேமாவதியின் உடலானது அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.