#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை கௌதமி அளித்த புகார்.! அழகப்பன், அவரது மனைவிக்கு பறந்த லுக் அவுட் நோட்டீஸ்.!
தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் கௌதமி. இவர் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எனது மருத்துவ சிகிச்சைக்காகவும்,
வேறு எந்த வேலையும் செய்ய முடியாததால் எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும் எனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய முடிவெடுத்தேன். அப்பொழுது பல ஆண்டுகளாக தனக்கு பழக்கமான அழகப்பனின் உதவியை நாடினேன். மேலும் அவரை முழுமையாக நம்பி
எனது நிலத்தை விற்பனை செய்து
கொடுப்பதற்கான அதிகாரத்தை அவருக்கு கொடுத்தேன்.
ஆனால் அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள் மற்றும் குடும்பத்தினர் போலியான ஆவணங்கள் தயாரித்து எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து நிலத்தை அபகரித்து மோசடி செய்து விட்டனர். அவர்களிடமிருந்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும். மோசடியில் ஈடுபட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் போலீசார் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாகியுள்ள அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி இருக்கலாம் என்ற தகவலால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.