தறிகெட்ட வேகத்தால் சறுக்கல்.. கல்லூரி மாணவர் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி., பதறவைக்கும் காட்சிகள்.!



Madurai Nagamalai Pudukkottai Road Accident Kills College Student

வாகனங்களில் செல்லும்போது கவனமும், மிதவேகமும் இல்லை என்றால், எமன் எதிர்திசையில் வருவான் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி நோக்கி தனியார் பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தியபடி வந்தது. 

அச்சமயம், எதிர்திசையில் மதுரை என்.ஜி.ஓ காலையில் வசித்து வந்த துரையரசன் என்ற கல்லூரி மாணவர், தனது இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் அதிவேகத்தில், தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டார். 

இதையும் படிங்க: சகோதரரின் கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த தங்கை.. வேலூரில் துயரம்.. ஐடி ஊழியருக்கு நேர்ந்த நிலை.!

சிகிச்சை பலனின்றி பலி

அப்போது, பேருந்து வந்துவிட, வாகனத்தை கட்டுப்படுத்த இயலாத துரையரசன், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது.

நன்றிPuthiyathalaimuraiTV 

இதையும் படிங்க: அதிவேகத்தால் சோகம்.. சைக்கிளில் சென்ற 12ம் வகுப்பு மாணவி பேருந்து மோதி பலி.. சென்னையில் துயரம்.!