#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாலியுடன் பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி.. விசாரணையில் அதிர்ச்சி.. அதிரடியில் அதிகாரிகள்.!
9 ஆம் வகுப்பு பயிலும் சிறுமி பள்ளிக்கு கழுத்தில் தாலியுடன் வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், சிறுமியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், சிறுமியொருவர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சிறுமியும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியின் கழுத்தில் தாலிக்கயிறு தொங்குவதை ஆசிரியர்கள் எதற்ச்சையாக கவனித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியிடம் ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில், அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து குழந்தைகள் நலத்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சிறுமியின் பெற்றோர்களால் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து, சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியை திருமணம் செய்த நபரின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.