மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணை சீரழித்த இராணுவ வீரர்; திருமணத்திற்கு மறுத்தால் காவல் நிலையம் முன் மோதல்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமன் (வயது 30). இவர் இராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரில் வசித்து வந்த 26 வயது இளம்பெண்ணுடன், இவர் பழகி வந்ததாக தெரியவருகிறது.
இருவரும் அவ்வப்போது தனிமையில் நெருங்கியதால், கர்ப்பமான பெண்ணை மிரட்டி ராமன் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். பின் திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி உசிலம்பட்டி அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென இரவில் கேட்ட அலறல் சத்தம்.! அக்கம்பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி.! பகீர் சம்பவம்!!
காவல்நிலையம் முன் பதற்ற சூழல்
கடந்த ஜனவரி மாதம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ராமனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர், நேற்று ராமன் உசிலை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அச்சமயம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். வழியில் இளம்பெண்ணின் குடும்பத்தை பார்த்து ராமன் மிரட்டல் விடுத்தால், பெண் தரப்பு - ராமன் தரப்பு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
காவல் நிலையம் முன்பே இருதரப்பும் சண்டையிட்ட நிலையில், அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் தொற்றிக்கொண்டது.
இதையும் படிங்க: என் மாமன் பொண்ணு மேல ஆசையா?.. 21 வயது இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற ரௌடி.. விருதுநகரில் பயங்கரம்.!