"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#ShockingVideo: மகளின் கண்முன் தந்தை மீது தாக்குதல் நடத்திய குடிகார கும்பல்.. பிண ஊர்வலத்தில் களேபரம்.! மதுரையில் பரபரப்பு.!!
மதுரையில் உள்ள அரசு மகளிர் கல்லூரி வாயில் சாலையில், நேற்று முன்தஹீனம் அமரர் ஊர்தியில் இறந்தவரின் சடலம் ஏற்றி கொண்டு வரப்பட்டது. அப்போது, இறுதி ஊர்வல வாகனத்திற்கு முன்பு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் கத்தி கூச்சலிட்டவாறு, இருசக்கர வாகனத்தில் ஒலியெழுப்பி வந்தனர். இதனால் அப்பகுதியில் சென்ற மக்கள் பீதியில் சாலையோரம் தஞ்சம் புகுந்தனர்.
அந்த நேரத்தில் கல்லூரியும் முடிந்திருந்தால், மாணவிகள் பலரும் தங்களின் வீடுகளுக்கு செல்ல வெளியே வந்தனர். இந்த மதுபோதை கும்பலால் பலரும் பதறிப்போன நிலையில், அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் தனது மகளை அழைத்து செல்ல தந்தை இருசக்கர வாகனத்தில் வருகை தந்தார்.
அப்போது, குடிமகன்களை பார்த்து, "எதற்காக இப்படி செல்கிறீர்கள்?. அமைதியாக செல்லலாமே" என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட கும்பல் ஆத்திரத்தில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிவந்து மகளின் கண்முன் தந்தையை தலைக்கவசத்தால் தாக்கி சண்டையிட்டுள்ளது. நடுரோட்டில் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தை கண்டு மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, செல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் மர்ம கும்பல் சொக்கிகுளம் தனியார் கல்லூரியில் புகுந்து மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாதுகாவலரை தாக்கிய விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குள்ளாக இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி முன்பு நடந்த கொலை வெறி தாக்குதல்..
— K.K (@kkmadurai9) November 4, 2022
(பி. கு.)சம்பவம் நடந்த இடத்தின் அருகாமையில் தான் PTR வீடு உள்ளது... pic.twitter.com/SLOESzLq5h