#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளம் பெண்ணை தனியே வரவைத்து இளைஞர் செய்த காரியம்! அதிரடி முடிவெடுத்த இளம் பெண்!
சில நேரங்களில் நாம் செய்யும் உதவியே நமக்கு பிரச்சனையாக திரும்புவது வழக்கம். அந்த வகையில் குடுத்த கடனை திருப்பி கேட்ட இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி என்ற பகுதியில் கவரின் நகை கடையில் வேலை பார்த்து வந்தவர் ரோஜா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சசி என்பவர் அவ்வப்போது பணம் கடன் பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. நாட்கள் சென்றது, சசி ராஜாவிடம் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக இல்லை.
இதனால் சசியிடம் நேரடியாக சண்டை போட்டுள்ளார் ரோஜா. இதனால் ரோஜாவை பழிவாங்க நினைத்த சசி பணம் தருவதாக கூறி ரோஜாவை வத்தலகுண்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தனக்கு பணம் கிடைக்கும் என்று நம்பி சென்ற ரோஜாவை விடுதி ஒன்றுக்கு அழைத்துச்சென்ற சசி அங்கு அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
மேலும் அதை புகைப்படமாக பதிவு செய்து ரோஜாவை மிரட்டியுள்ளார். முதலில் சசியின் மிரட்டலுக்கு பயந்த ரோஜா பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ரோஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் சசியை கைதுசெய்து சசி மற்றும் ரோஜா இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.