"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என கூறி இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்.!
சென்னை கொளத்தூரை சேர்ந்த 28 வயது இளம்பெண், திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு முகநூல் மூலம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த விக்ரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் விக்ரம், இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், விக்ரமுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், விக்ரமுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்தநிலையில் விக்ரம் அந்த இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். பணத்தை தராவிட்டால் இருவரும் ஒன்றாக இருக்கும் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.