#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தற்கொலை செய்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய உறவினர்கள்! தூக்கிலிட உத்தரவிட்ட நீதிமன்றம்!
சென்னை பல்லாவரம் பகுதியில் வசித்து வந்தவர் தாமோதரன். 38 வயது நிறைந்த அவர் பம்மல் ஏழுமலை தெருவில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் தாமோதரன் தாய் சரஸ்வதி, மனைவி தீபா மற்றும் குழந்தைகள் ரோஷன் மற்றும் மீனாட்சி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். தீபா வீட்டில் தையல் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாமோதரனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார்.மேலும் வங்கியிலும் கடன் வாங்கியுள்ளார்
இந்நிலையில் அதனை திருப்பிக் கொடுக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்த தாமோதரன் அவரது மச்சானுக்கு போன் செய்து எனக்கு வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்ளே தீபா, சரஸ்வதி மற்றும் குழந்தைகள் ரோஷன், மீனாட்சி ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மேலும் தாமோதரனும் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடியநிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனைவரும் உயிரிழந்த நிலையில் தாமோதரன் மட்டும் உயிர் பிழைத்துக் கொண்டார்.
இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிகிச்சைக்குப் பிறகு தாமோதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தாமோதரன்தான் குற்றவாளி என நிரூபனம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.