தாயை கொடூரமாக கொன்று விட்டு, விடிய விடிய அருகிலேயே உட்கார்ந்திருந்த மகன்! ஏன்? என்ன நடந்தது? அதிர்ச்சி சம்பவம்!!



mentaly disabled son killed mother

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாத்திக்கேட்டை பகுதியை சேர்ந்தவர் 70 வயது நிறைந்த சரஸ்வதி, இவரது கணவர் சந்திரசேகரன். இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேருக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதியின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தனது கடைசி மகன் பழனியுடன் வசித்து வந்துள்ளார்.

திருமணமாகாத பழனி, மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவருக்கு தலையில் அடிபட்ட நிலையில் பழனி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்யும் பழனியை அவரது தாயார் தடுத்து நிறுத்துவார்.

இவ்வாறு அண்மையில் வெளியே செல்ல முற்பட்ட பழனியை சரஸ்வதி தடுத்து நிறுத்தியபோது ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அம்மாவின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்தது தெரியாமல் அவரது அருகிலேயே பழனி படுத்து தூங்கியுள்ளார்.

Murderமறுநாள் காலை பழனி தனது தாயை எழுப்பிய போது அவர் எழுந்திருக்காத நிலையில் அவர் அருகில் இருந்த தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது சட்டை மற்றும் கைகளில் ரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரி அதிர்ச்சியடைந்து விரைந்து சென்று வீட்டில் பார்த்தபோது சரஸ்வதி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.