வடமாநில தொழிலாளி பட்டினிச்சாவு; அமைச்சர் சி.வி கணேசன் நேரில் அஞ்சலி.!



Minister CV Ganesan Pay Tribute to North indian Youth Dies by Hungry 


மேற்குவங்கம் மாநிலத்தில் வசித்து வந்த 11 பேர், கடந்த செப் மாதம் விவசாய பணிகளுக்காக சென்னை வந்துள்ளார். இவர்கள் ஏஜென்ட் மூலமாக பொன்னேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 3 நாட்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பின் சொந்த ஊர் செல்ல செப்.13 அன்று சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து உறங்கி இருக்கின்றனர்.

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்

கிட்டத்தட்ட 2 நாட்கள் அங்கேயே இருந்த நிலையில், இவர்களில் ஐவர் அடுத்தடுத்து பசியால் மயங்கி விழுந்தனர். இந்த தகவல் அறிந்த இரயில்வே காவல்துறையினர், இவர்களை மீட்டு அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். விசாரணையில், இவர்கள் அனைவரும் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள மேற்கு மிண்டனாபூர், மங்குரள் பகுதியில் வசித்து வரும் சமர் கான், மாணிக் கோரி, சத்யா பண்டித, ஆசிக் பண்டித, கோனாஸ் ஸ்மித் என்பது உறுதியானது. 

ஒருவர் பட்டினிச் சாவு

இவர்களில் நால்வர் பூரண நலன் பெற்று சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த சமர் கான், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 35 வயதாகும் சமருக்கு மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர். வறுமையில் வாடித்தவித்த குடும்பத்தின் பசியை போக்க, சென்னைக்கு அவர் வாழ வழிதேடிவந்த நிலையில், அவரின் வாழ்க்கைக்கு இறுதிப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவரின் குடும்பத்தினர் உடலை சொந்த ஊர் கூட எடுத்துச் செல்ல இயலாமல் அவதிப்பட்டுள்ளனர். இந்த தகவல் அறிந்த சில நல்லுள்ளம் கொண்டவர்கள், உதவிக்கரம் நீட்டி இருந்தனர். 

இதையும் படிங்க: #Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!

இந்நிலையில், இன்று அவரின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அரசால் உதவி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் சிவி கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அக்குடும்பத்தின் செலவுக்காக ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார். 

இதையும் படிங்க: கழிவுநீர் பள்ளத்தில் விழுந்து இளைஞர் மரணம்; போதையில் தள்ளாடி சோகம்.. இழப்பீடு கேட்கும் இ.பி.எஸ்.!