மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அமெரிக்கா போயிருந்தா அம்மா இருந்திருப்பாங்க" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு.!
கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சியும் இருக்க வேண்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்போதும் கூறுவார் என எஸ்.பி வேலுமணி பேசினார்.
மூத்த தமிழ் நடிகை & அதிமுக பொதுச்செயலாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அவரின் மரணம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு, அதிமுக இன்று டிடிவி தலைமையில், ஓபிஎஸ் தலைமையில் என 2 கிளை அணிகளாக உடைந்து, தனிக்கட்சிகளாக உதயமாகிவிட்டது.
நீதி நிலைநாட்டப்படும்?
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் கொடநாடு விவகாரம் என்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. அங்கு நடந்த கொலைகளுக்கான காரணங்கள் இன்று வரை மர்மமமாக இருக்கிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, இன்றைய முதல்வர் & திமுக தலைவர், ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கொடநாடு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் என பேசி வாக்குகளை கவர்ந்து இருந்தார். இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை.
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!
முன்னாள் அமைச்சர் பேச்சு
இந்நிலையில், சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "2011, 2016ல் தொடர் ஆட்சி, அவரின் (மறைந்த முதல்வர் ஜெயலலிதா) உயிரை பற்றிக்கவலைப்படாமல் ஆட்சியை அமைத்தார். அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றிருந்தால், இன்று நலமுடன் இருந்திருப்பார்.
EPS - OPS | File Pic
அவர் கேட்கவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சியும் இருக்க வேண்டும் என அவர் சட்டப்பேரவையில் பேசினார். அவர் உடல்நலனை பற்றி நாங்கள் சொல்வதையும் கேட்கவில்லை. எங்களையெல்லாம் அன்று எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்த்தார்" என பேசினார்.
இதையும் படிங்க: "இன்னைக்கி மழை மட்டும் பெஞ்சிருக்கணும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு.!