வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இதற்காகத்தான் கொரோனா வார்டுக்குள் சென்றேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீப காலமாக திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து இந்த மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
— M.K.Stalin (@mkstalin) May 30, 2021
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்! pic.twitter.com/bs2TeyhtxX
இந்தநிலையில், கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்! இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.