தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்துதள்ளிய பிரதமர் மோடி.! பிரதமருக்கு கோரிக்கை வைத்த மு.க.ஸ்டாலின்.!
சென்னை மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதற்காக நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை கொடுத்து கவுரவித்தார்.
அயல்நாட்டு வீரர், வீராங்கனைகள் இதுபோன்ற ஒரு பிரமாண்ட செஸ் ஒலிம்பியாட் இதுவரை நடைபெற்றதே இல்லை என பாராட்டினர். இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள். @mkstalin
— Narendra Modi (@narendramodi) August 10, 2022
இதுதொடர்பாக பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், "44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்" என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உங்கள் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி. விருந்தோம்பலும் சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். இது போன்ற உலகளாவிய நிகழ்வுகளை நடத்த தமிழகத்திற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.