#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோடி மற்றும் சீன அதிபருடன் இருக்கும் இந்த 3-வது நபர் யார் தெரியுமா?
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரின் சந்திப்பு நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அங்கு பலத்த பாதுகாப்பும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கும் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் செல்கிறார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்திற்கு வந்திருக்கும் சீன அதிபரை மோடி வரவேற்று உபசரிப்பது பற்றி செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் யார் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்தநிலையில் அவர் யார் என்பது குறித்து தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது.
பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இவர்களின் சந்திப்பின்போது இவர்களுடன் இரண்டு பேர் இருந்தனர். அதில் ஒருவர் சீனாவை சேர்ந்தவர் என்பது அவரை பார்க்கும்போதே அனைவருக்கும் தெரியும், ஆனால் மற்றொருவர் இந்தியர் என்று தெரிந்தாலும், யார் அவர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
#ModixijinpingMeet@narendramodi Ji explaining the beauty of sculptures of our great histories Sri Ramayana and Mahabharata to China President #XiJingping at #Mamallapuram#MamallapuramSummit#Mahabalipuram pic.twitter.com/bGkHgkrWwh
— Ramapriya Sampathkumaran (@ramapriya1989) October 11, 2019
இந்தநிலையில் மோடியின் அருகில் நின்று கொண்டிருந்த அந்த இந்தியர் பெயர் மது சுதன் ஆகும். இவர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி - ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் செயல்பட்டார். இந்தநிலையில் தற்போதும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெறும் மோடி - ஜின்பிங் சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.