#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சச்சின், தோனி, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி! அவர்களுடன் என்ன பேசினார்?
கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் ஆரம்பித்த கொடூர வைரஸான கொரோனா உலகம் முழுவதும் பரவி இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்போவான் சச்சின் டெண்டுல்கர், டோனி, விராட் கோலி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலி காட்சி முறையில் ஒரு மணி நேரம் கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி.
கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா உள்ளிட்ட பல விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கொரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
குறைந்த நேரமே இருந்ததால் மோடியுடன் 9 வீரர்கள் மட்டுமே உரையாட முடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்த அரசின் நடவடிக்கைகளுக்குப் விளையாட்டு வீரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.