மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது மோடி ஆட்சி, நினைத்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்துவிடுவோம்.! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு.!
தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது என நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தலின் போது தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க சார்பாக பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்றக் குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தனித் தமிழ்நாடு ஆசைக்கு பிறகு எனக்கு ஒரு ஆசை வந்திருக்கிறது. தனி நாடு பற்றி நான் பேசவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. எனக்கு தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. தமிழ்நாட்டை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்.
நிர்வாக வசதிக்காக ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம் எனவும் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.