வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
52 வயது ஓனரின் 36 வயது மனைவியுடன் கள்ளக்காதல், உல்லாசம்.. கொலை முயற்சியில் தப்பித்த கணவன்., சிக்கிய கள்ளக்காதல் கும்பல்.!
கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்துகொண்ட கணவனை மனைவி கொலை செய்ய முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் கள்ளகாதலனுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், சண்முகா நகரில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 52). இவர் நாமக்கல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நடராஜனின் மனைவி கிருத்திகா (வயது 36). நடராஜனுக்கு சொந்தமாக ஜே.சி.பி இயந்திரமும் உள்ள நிலையில், அதனை பரமத்திவேலூர், தண்ணீர் பந்தல்மேடு கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது 35) என்பவரின் மேற்பார்வையில் விட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று கிருத்திகா பரமத்திவேலூரில் உள்ள கடைக்கு சென்று பொருள் வாங்கி வருவதாக கணவர் நடராஜனிடம் கூறி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருக்கவே, வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தப்பி செல்ல முயன்றவரை பிடித்து பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், நடராஜனை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காவல் துறையினர் பிடிபட்ட மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், நத்தக்காடு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் யோகேஸ்வரன் (வயது 29) என்பது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது, நடராஜனை தீர்த்துக்கட்ட யோகேஸ்வரன் அனுப்பி வைக்கப்பட்டதும், அவரை அனுப்பி வைத்தது கிருத்திகா மற்றும் கோபால் என்பதும் அம்பலமானது. இதனையடுத்து, கிருத்திகாவை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் தெரியவந்தது.
"கோபால் அவ்வப்போது எனது வீட்டிற்கு கணவருடன் வந்து செல்வார். அப்போது, எனக்கும் - அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, நாங்கள் இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால், அவர் எங்களை கண்டித்தார். இதனால் எனக்கும் - கணவர் நடராஜனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் நடராஜனை தீர்த்துக்கட்ட திட்டம்போடவே, யோகேஸ்வரனிடம் கூலிப்படை எதாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று கூறினோம். அவர் நானே அவரை கொலை செய்கிறேன். எனக்கு ஏவுளவு பணம் தருவீர்கள் என்று கேட்க, எவ்வுளவு வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று கூறியதால், எங்களின் திட்டப்படி யோகேஸ்வரன் வீட்டிற்கு வந்து கணவரை கொலை செய்ய முயற்சித்தார். ஆனால், பொதுமக்கள் வந்ததால் அது பொய்த்துப்போனது" என்று தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு விவகாரத்தில் முதற்கட்டமாக கிருத்திகா மற்றும் யோகேஸ்வரனை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கோபாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.