குடும்ப தகராறில் சோகம்.. மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தற்கொலை..!



Namakkal Paramathi Velur Man SUicide Family Problem

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பெருமாள்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 37). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சிவகாமி (வயது 32). தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். 

இதில், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில், கணவன் மனைவியிடையே மீண்டும் குடும்பத்தார் ஏற்படவே, சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சிவகாமி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதனால் மணமடைந்த நிலையில் காணப்பட்ட சுரேஷ் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, சுரேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக பரமத்தி வேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.