#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னம்மா யோசிக்கிறாங்க.. பறவை, குரங்கை விரட்ட புது ஐடியா; விவசாயி புதிய முயற்சி..! வைரல் வீடியோ உள்ளே.!
விவசாயிகள் தங்களின் விலைபொருள்களை, விலை நிலத்திலிருந்து விற்பனை செய்யும் வரை பல்வேறு முறைகளை உபயோகித்து பாதுகாத்து வருகின்றனர்.
விளைநிலங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கு, பறவைகளின் நடமாட்டத்தை விரட்டுவதற்கு சோள பொம்மை போன்றவற்றை அமைத்திருப்பார்கள். அதேபோல ஆங்காங்கே தடிகளை நட்டு வைத்து துணிகளை பறக்கவிட்டு ஆட்கள் இருப்பது போல பாவனை செய்திருப்பார்கள்.
காக்கா விரட்ட புது ஐடியா 😂😂 pic.twitter.com/QzHJLDMalw
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) December 22, 2023
காற்றின் வேகத்தில் துணி ஆடும்போது ஆட்கள் இருப்பது போல தோன்றுவதால் பறவைகள் அதனை கண்டு ஒதுங்கி சென்றுவிடும். நவீன மயமான உலகத்தில் அனைத்தையும் ஸ்மார்ட் வொர்க் செய்யும் நபர்கள் தற்போது புதுப்புது விஷயங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்மணிகளை வெயிலில் உலர வைத்துள்ள விவசாயி ஒருவர், பறவைகள் மற்றும் குரங்குகள் போன்றவற்றை விரட்டும் பொருட்டு ஸ்பீக்கர் அமைத்து அதில் தனது பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை தொடர்ந்து ஒளிபரப்பி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.