#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்று முதல் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு.!! வெறிச்சோடிய சென்னை மாநகரம்.! வெளியூர்களுக்கு தயாராகும் மக்கள்.!
தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்தநிலையில், இன்று இரவு 10 மணி முதல் சென்னையில் சாலைகள் வெறிச்சோடின.
இரவு நேர ஊரடங்கு இன்றுமுதல் அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முக்கிய பேருந்து நிலையங்களில் பலர் குவிந்தனர். ஊரடங்கு நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணத்தின்போது சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.