இளம்பெண்கள் டார்கெட்.. போதைக்கு அடிமையாக்கி, பலாத்காரம்., பாலியல் தொழில்..! வடசென்னை சப்ளையர் கைது., 2 பெண்கள் மீட்பு.!



North Chennai Drug Supplier Arrested by Police He Raped Woman Drug Sales Forced Prostitutions

வடசென்னையில் போதைமாத்திரை காலச்சாரம் அதிகரித்து வருவது அம்பலமாகிவரும் நிலையில், கடந்த 2 வாரத்தில் போதை மாத்திரை விவகாரத்தில் 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், பெண்ணை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் தள்ளிய பகீர் சம்பவ தெரியவந்துள்ளது. 

வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலை மேம்பாலம், கண்ணன் ரவுண்டானா பகுதியில் காவல் ஆய்வாளர் பிரான்வின்டேனி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்திய அதிகாரிகள் சோதனை நடத்தினர். காரில்பயணித்த வாலிபர் மற்றும் 2 பெண்கள் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர். 

இதனையடுத்து, காரில் சோதனை நடத்தியபோது, மெத்தம்பெட்டமின் போதை மாத்திரை மற்றும் எல்.எஸ்.டி மாத்திரை ஸ்டாம்ப் இருந்துள்ளது. இவர்களை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை  அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி, தென்காசி மற்றும் சென்னையை சேர்ந்த இளம்பெண்கள் என்பது அம்பலமானது.

North chennai

பாலசுப்பிரமணி இளம்பெண்களை போதை மாத்திரை பழக்கத்திற்கு அடிமையாக்கி, இவர்களை சீரழித்தது மட்டுமல்லாது விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரமும் அம்பலமானது. இதனையடுத்து, அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் பல்வேறு தகவல் தெரியவந்துள்ளது. 

அதாவது, பாலசுப்பிரமணியன் வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், இளம்பெண்களை அதிகளவில் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்துள்ளான். சில நேரங்களில் மூளைச்சலவை செய்தும் பெண்களுக்கு போதைமாத்திரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

North chennai

பெண்கள் போதை மாத்திரைக்கு அடிமையானதும், அவர்களுக்கு மாத்திரையை கேட்கும் போது கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்களை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அதே இளம்பெண்களை மிரட்டி விபச்சாரத்திலும் தள்ளியிருக்கிறார். போதைக்கு அடிமையான பெண்களும் வேறு வழியின்றி பாலசுப்பிரமணியனின் செயல்பாட்டுக்கு ஒத்துழைத்துள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் பாலசுப்பிரமணியன் மீது 2 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்களுக்கு அறிவுரை கூறி, அவர்களுடன் பெற்றோரை வரவழைத்து அனுப்பி இருக்கின்றனர். பாலசுப்பிரமணியனுடன் தொடர்பில் உள்ள கும்பலை கூண்டோடு கைது செய்யவும் விசாரணை நடக்கிறது.